விடுதலை - Kalyani Uthayasurian

விடுதலை

அடிமை ஜனித்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஆணவம் மடிந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

இரத்தம் பாய்ந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஈர்ப்பு குறைந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

உணர்வுகள் சிலிர்த்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஊமைகள் மொழிந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

எழுத்துக்கள் ஒலித்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஏரணங்கள் வெடித்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஐயங்கள் ஒளிந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஒற்றுமை நிறைந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஓங்கிய திரள் மடிந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஓளவியம் அழிந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

எஃகுவாள் சீறின - பிறந்தது

விடுதலை முழக்கம்..

கரங்கள் கோர்த்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

கல்விகள் பரவின - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஙாவரம் திரண்டன- பிறந்தது

விடுதலை முழக்கம்..

சத்தியம் சரிந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

செங்குருதி வார்ந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

சொற்றம்பு பாய்ந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ஞாயிறு சுடர்விட்டன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

டமாரங்கள் வெடித்தன- பிறந்தது

விடுதலை முழக்கம்..

தந்திரம் தோய்ந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

தியாகம் ஜனித்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

துணிவு மீண்டன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

துரோகங்கள் சரிந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

நற்பண்பு வென்றன- பிறந்தது

விடுதலை முழக்கம்..

பாதகம் பற்றியெறிதன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

மதங்கள் இணைந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

மரபு உயிர்த்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

மாந்தர்கள் வெகுண்டன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

யாவரும் முழங்கின - பிறந்தது

விடுதலை முழக்கம்..

ரௌத்திரம் பெருகின - பிறந்தது

விடுதலை முழக்கம்..

லட்சியம் கூடின - பிறந்தது

விடுதலை முழக்கம்..

வர்ணங்கள் மறைந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

வீரர்கள் மடிந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

பிழைகள் தெளிந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

சூள் உதித்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

மறம் மீண்டெழுந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

கொடி பறந்தன - பிறந்தது

விடுதலை முழக்கம்..

பிறந்தது

விடுதலை முழக்கம்..

பிறந்தது

விடுதலை முழக்கம்..

யாருக்கு ? - பிறந்தது

விடுதலை முழக்கம்…

பிறந்தது

விடுதலை முழக்கம்..

வெஃகல் பரங்கியன் - பதறினான்

பாரதம் கண்டு

பிறந்தது விடுதலை..

யார் யாருக்கு

அளித்தது விடுதலை..

பரங்கியன் கொடுத்ததா ?

பஞ்சம் பிழைக்க

வந்தவன் கொடுத்ததா ?

கேட்டாலே கொக்கறிப்பாள்

தாய் பாரதம்..

விடுதலை - எமக்கு

விடுதலை தர

உம் ஙனம் பாரதம் அல்ல..

வெகுண்டாள் - தாய் பாரதம்

பதறுபவனுக்கு பாரதம்

சொந்தமில்லை..

பயந்தவனுக்கு பாரதம்

சொந்தமில்லை..

வஞ்சித்தவனுக்கு பாரதம்

சொந்தமில்லை..

வந்தோரை வாழ

வைக்கும் பாரதம்..

வாய்ப்பு அளித்தாள்

இருநூறு ஆண்டுகள்

வெள்ளையனுக்கோ - திருந்தும்

எண்ணமில்லை..

பிறந்தது விடுதலை

முழக்கம்..

பாரதத்திற்கு

கொடுக்கப்பட்டது அல்ல

விடுதலை..

பாரதம்

கொடுத்தது விடுதலை..

போராடித் தரப்பட்டது

அல்ல பாரத விடுதலை..

பெரியோர் குருதி சிந்தி

கொடுக்கப்பட்டது

அல்ல பாரத விடுதலை..

கொடுத்தது விடுதலை

தாய் பாரதம்...

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

வெள்ளையன் தலை

தப்பித் தாயகம் திரும்பிட

வழங்கினாள் - விடுதலை

தாய் பாரதம்...

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

அகிம்சை போர் புரிந்து

பெறப்பட்டது அல்ல

பாரத விடுதலை..

விரட்டியடிக்கப்பட்ட

அந்நியனுக்கு கொடுத்தது

விடுதலை

தாய் பாரதம்..

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

ஓட்டம் எடுத்தான்

இரவோடு இரவாக..

ஆட்டம் போட்டார்கள்

பாரதக் குழந்தைகள்..

பாரே வியக்க..

வழங்கிய விடுதலைக்கு

கொண்டாடினாள்..

கொண்டாடுகிறாள் - இனியும்

கொண்டாடுவாள்..

தாய் பாரதம்..

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

விடுதலை - துஷ்ட

அயலவர்களுக்கு

அளித்த விடுதலை..

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

வேற்றுமையில் ஒற்றுமை

கண்ட - பாரதர்கள்

அளித்த விடுதலை..

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

இமயம் முதல் குமரி

கொண்ட தாய் பாரதம்

அளித்த விடுதலை..

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

இருள் சூழ்ந்த

கலங்கத்தால் - சித்தம்

கலங்கி நின்றாள்

பாரதம்..

வீழ்ந்ததாக எண்ணி

மமதை கொண்டாய்..

வீழ்த்தினாள் - உமக்கு

விடுதலை தந்து..

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

ஆகஸ்ட் 15 1947

ஆம் ஆண்டில்

வெளுத்தது

வெள்ளையனின் கறை..

அவன் கறையில் இருந்து

எம் தாய்க்கு விடுதலை...

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

துடைத்தெறியப்பட்டது

கசடுகள்..

காட்சியாக மிளிர்ந்தாள்..

பொன்னொளி தாயவள்

ஒளிர்ந்ததில் - தகதகத்தது

பாரதம்..

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

அயலவர்கள் தம்

தாய் மடி சாய

வாழ்த்தி விடைக்

கொடுத்தாள் - விடுதலை

தாய் பாரதம்..

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

கொடையன் கர்ணனை

ஈன்றவள் - எம் தாய்..

கொடுத்தவளின் ரேகை

மறைந்திருக்க கூடும்

கரம் ஏந்தத் தோன்றுமோ ?

வழங்கப்பட்ட விடுதலை

அல்ல - வழங்கிய விடுதலை

தாய் பாரதம்..

அதுவே - எங்கள்

பாரத விடுதலை..

போற்றுவோம் எந்நாளும்

நம் தியாக பூமி..!

மறவாமல் இருப்போம்..

நம் சரித்திர விடுதலை..!

வந்தே மாதரம் என்ற

விடுதலை முழக்கம்

எந்நாளும் முழங்குவோம்..

முழக்குவோம்..

வந்தே மாதரம்..!

வந்தே மாதரம்..!