குழந்தைப் பருவ நினைவுகள்- Shalini M

ம்ம்ம்....

பெருமூச்சோடு ....என் சாய்வு நாற்காலியில் ...ஒரு உறக்கம் தேட நினைத்தேன்!!

விழி வரை வந்த உறக்கத்திற்கு உள்ளே செல்வதற்குள் அவசரம்...ஓடிவிட்டது !!!!

திடீரென அமைதி...இருள் மூட்ட மேகமாய்..

நினைவுகள் ஜொளிக்க விட்டத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு நினைவூஞ்சல் பயணம்!!!!!

பல நினைவுகளைக் கடந்து சென்றது என் நினைவுப் பயணம்!!! ஒரு கடல் போல்....

அந்த ஆழ் கடலில் ஒரு மீன் கண்டேன்....

துள்ளிக் குதித்து வலைந்து ஓடும் மீன்...

எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாத மீன்!!

வெகுளித்தனமாய் பல கேலிகள் செய்த மீன்...

என் கண் முன்னே நிழலாடியது...

பெரிய பொறுப்புகள் இல்லாத ...உறவுகள் பற்றிய கவலைகள் இல்லாத .....கஷ்டங்கள் இல்லாத அந்தக் குழந்தைப் பருவம் ....பார்க்க முடியாத பிஞ்சுப் பருவம்....

இனி நினைத்துப்பார்க்க மட்டுமே....

மீண்டும அந்த மீனைப் பார்க்க ஆசை....

ஒரு புதிய நினைவுகளை சேகரிக்க....