பெண்கள் | Haritha Jennifer D

THE FOLLOWING POEM WAS SELECTED IN WINGWORD POETRY PRIZE 2023 LONGLIST.

பிஞ்சுக்கு உயிர்

கொடுப்பவள் நீயே!

நஞ்சுக்கு உயிரேடுப்பவலும்

நீயே காளியாக!

வேண்டாம்வேணடாமென்று அன்று பிறந்தாலும்

வேண்டும்வேண்டும் என்றளவுக்கு இன்று

பலராலும் போற்றப்பட்டு நாட்டின்

கண்களாகியது நம் பெண்களே!!

உன்னைக் கருவிலேயே

கலைக்கத் துடிப்போரையும்

உன் இதயம்

துடிக்கும் வரை

நிலைக்க வைப்பவள்

நீ அல்லவா!

பெண்ணே நீ

வெறுங்கலை அல்ல!

ஏனென்றால் நீ

அருபதில் ஒன்றல்ல!!

அருபதையுமே உன்னில்

வைத்திருக்கும் பெருங்கலையே

நீ தான்!

பெண்கள் எறும்புகள் போன்று

சுறுசுறுப்பாக சுற்றித் திரிந்து

சிறுசிறு குறும்புகள் புரிந்தாலும்

குணத்தில் கரும்புகள் போன்றவர்களே!

பெண்ணே நீ-தலையில்

அணிவதோ மல்லிப்'பூ'

ஆனால் முகத்தில்

அணிவதோ சிரிப்'பு'

நீ விலைக்கொடுத்து

வாங்குவதோ பொன்நகை

விலையே இல்லாமல்

பிறருக்குக் கொடுப்பதோ

உன்னுடைய புன்னகை!

கஷ்டங்களை உன்னில்

மறைத்து அதிர்ஷ்டங்களை

பிறருக்குக் கொடுக்கும்

தேவதை நீ!

பெண்கள் பலவீனமான

பாலினம் என்றனர்

மூடர்கள் சிலர்;

அந்த மூடர்களையே

தாங்கும் பூமிமாதா

ஒரு பெண்!

பெண்கள் பலவீனமானவர்கள்

அல்ல; பலவிதமானவர்களே!!

தன்னலம் இவர்களுக்கு

கானல்நீர் போன்றது

பொதுநலமே இவர்களுக்கு

நதிநீர் ஆயிற்று

பெண்ணே நீயொரு

மதி, தேய்வதிலல்ல;

பிறரைத் தேற்றுவதிலும்;

விதியை வெல்வதிலுமே!

மகளான நீ

தாயுமாகி, தாயுமானவனாலும்

பாராட்டப்பெற்றவள் நீ!

பல பிம்பங்களைப் பெற்று

நாட்டிற்கே கம்பமாகிறாய்!

எல்லை இல்லா அலைகளைப்

போன்ற உன் பெருமைகள்

மலைகளின் உச்சத்தை அடைய

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!