திருமண காதல் | Priyanka Ramakumar

பிழைகள் நீங்கும் மாயம் கண்டோம்,

விழிகள் பகிரும் காதல் கண்டோம்,

வானின் நீளம் மறையும் தூரம்,

தேடும் கண்களின் பயணம் நீளும்.

--------------------

ஏக்கம் இருப்பினும் விலகும் கைகள்,

ஏந்தி பிடிக்கும் அவன் கண்ணீர் துளிகள்,

விளையாட்டு பெண் அவள் தந்தை கரம் விட,

தாய்மை உணர்ந்தாள் மணவாளன் கை பட.

--------------------

வீசும் காற்று வாசம் பிடித்திட,

நிலவின் ஒளியோ அழகை ரசித்திட,

விண்மீன் பார்த்து மகிழும் இருவர்,

இரவின் மடியில் இழைந்திடும் எதிர் முனைகள்.