மாற வரம் தருவாயா?- JEYACHANDRAN RAJU

மாற வரம் தருவாயா?

உச்சரிக்கலாகா உபாதைகள்;

உச்சக்கட்டமாக, மரணவாயில் சென்று

பிரசவித்த பெறுவதற்கரிய அன்னையை

நிர்கதியாய் நிறுத்திவிட்டு,

அழியும் அற்பப்பொருள் வேண்டி

கண்டம்விட்டுக் கண்டம் பாயும்

அதிபுத்திசாலியாய் இருப்பதைவிட....

அலுங்கும் இலை,தழைகளை

அசுரத்தனமாய் ஆட்டுவித்து,

அடியோடு பிடுங்கி எறிய

எமனாய் எத்தனித்த புயலை

எதிர்த்து உயிர் காத்த

நிலத்தாயை நீங்கலாகாது,

வேர் பாய்ச்சி நிற்கும்

பட்டுப்போன மரமாய் மாற

வரம் தருவாயா இறைவா.…?