வாழ்க்கை பாடம்- Nithya K

வாழ்க்கை பாடம்

ஈரைந்து மாதங்கள் உனை சுமந்து

இப்பூவுலகை ரசிக்கவைத்த தெய்வம் உன் அன்னை!!!!

அழுகின்ற குரலின் ஒலி நிற்பதற்குள்

உன் தேவையறிந்து செயலாற்றும் ஒப்பில்லா உறவே உன் அன்னை!!!

பயமும் பதற்றமும் நிறைந்த நம் வாழ்வை

தெளிவும் நிதானமும் நிறைந்ததாக மற்றும் மாயாஜாலக்காரர் உன் தந்தை!!!

வலிகளும் சொற்களும் நமக்களித்து

நம்மை சிற்பமாக மற்றும் சிற்பி உன் தந்தை!!!!

ஆம்!!

கருங்கற்களும் வைரமாய் ஜொலிக்க சிறுநாட்கள் வலிவாங்குமே!!

இன்பமும் இரட்டிப்பாகும் துன்பம் தவிடுபொடியாகும்

உன் அருகாமையில் நான் நின்றால் தோழனே!!!

உரிமையை உறவாடும் என்னுயிர் சொந்தங்களே!!!

இதுவே சொர்க்கம்!!!!

மண் மதிக்கும் நம் மக்கள் நன் மக்களன்றோ!!

பொன்னாய் விளையும் நெற்கதிர்கள் தனை தாங்கும்

நம் மண்ணை தலை வணங்கி நிற்கிறதே!!

மனிதா ஒரு சொட்டு நீரும் அமிர்தமடா தாகமெடுக்கும் தருணத்தில்!!!

சுடு நெருப்பு சுவாலையாயினும் கடுங்குளிரில் நமை

காக்கும் நம் காவலன் அன்றோ!!!

வான் மழை பொழியும் நம் வானத்தின் அற்புதங்கள் பல பல…

உள்ளிழுக்கும் நம் உயிர் மூச்சு ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தால்

மனித இனம் மரித்து போகுமே!!

செயற்கை நுண்ணறிவு ஆட்கொண்ட வேளையிலும் நம் இயற்கை நுண்ணறிவு

சகாப்தம் படைக்குமே!!!

ஒருபிடி மண் எடுத்து விதையூன்றி நாம் வைத்தால் காலம் முழுதும் இளைப்பாற

நிழல் தரும் மரத்தின் வாழ்வில் உள்ளதடா மனித உணர்வு!!!

தெருவில் சிறு பிள்ளை அழும் நேரம் நம் மனம் நோகும்

ஓடி சென்று கவலை தீர்த்து அம்மழலை முகத்தில் புன்னகை தவழும்

அந்நேரம் நம் கண்களில் ஆனந்த கண்ணீர் கரை புரண்டோடும்!!!!

பேருந்தில் அமர இடமின்றி தவிக்கும் மூதாட்டியின் நிலையறிந்து நாம் எழும்

அந்நேரம் அவரின் பார்வையின் ஆசீர்வாதங்கள் பல கோடி!!!!

இயற்கையின் இன்பத்திலும் மனிதாபிமானத்தின்

நெகிழ்ச்சியிலும் திளைத்து விடு மனிதா!!!!!!!

உணர்ந்துகொள்!!!!!!!!!!!!!!

இதைவிட பேரின்பம் ஏதும் இல்லை

இதுவே நம் வாழ்க்கை பாடம்!!!!