THE FOLLOWING POEM WAS SELECTED IN WINGWORD POETRY PRIZE 2023 LONGLIST.
கோடிக்கணக்கான இணைபிரியாத தோழமைகளோடு தொன்று தொட்டு வாழ்ந்து வந்தேன்!
அரசல்புரசலாக தோழமைகள் அதிர்ந்தார்கள்!
சற்று நிலைகுலைந்தார்கள்!
என்ன ஆனதோ?
ஏது ஆனதோ?
என்று விலாசம் தேடி விசாரிப்பதற்குள் என் தோழமைகளின் தொடர்புகளை துண்டித்து, உணர்வுகளை நசுக்கி, ஏதோ ஒரு சுழலும் குழாய் ஒன்றின் வழியாக உறிஞ்சி வெளியில் வீசப்பட்டேன்!
இத்தனை காலம் இணைபிரியாமல் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருந்த தோழமைகள் எல்லோரும் சிதறி சிதைந்தார்கள்!
நானும் அந்த எந்திரத்தின் அருகில் தான் வந்து விழுந்தேன்!
"மண்ணு மசுரு மாரி இருக்கு"
"நூறு அடி போட இன்னும் மூணு நாளாகும்"
என்று மனிதர்கள் மொழியில் ஏதோ கேட்டது!
"பரவாயில்லை ஏதோ ஆபத்திலிருந்து மனிதர்கள் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்"
என்று நிம்மதியடைந்தேன்!